திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (07:58 IST)

நடிகர் கமல் வெறும் வாய் தான் பேசுவார்: தேர்தல்னா அவருக்கு பயம் - கமலை வாரிய அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தல் என்றாலே பயந்து ஓடும் நடிகர் கமல்ஹாசன் எந்த தேர்தலிலும் போட்டியிடப்போவதில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல், 'மக்களவை தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகிக் கொண்டிருப்பதாகவும், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய வேலையில் ஈடுபடுவோம் என்றும் கூறினார். 
 
சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அரசியல் என்பது மிகப்பெரிய சமுத்திரம். அதில் விஷால் அரசியலில் நுழைந்திருப்பதைப் நாங்கள் ஏன் எதிர்க்க வேண்டும். அது அவரது உரிமை. ஆனால் ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை என்று சொல்ல விஷால் அதிகாரம் பெற்றவர் கிடையாது.
மேலும் நடிகர் கமல்ஹாசனுக்கு தேர்தல் என்றாலே பயந்து ஓடுவார். அவர் வெறும் வாய் ஜாலம் தான். ஆகவே அவரையெல்லாம் ஒரு பொருட்டாகவே பேசக்கூடாது. அவர் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டார் என ஜெயக்குமார் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து பேசினார்.