1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 19 மார்ச் 2018 (20:55 IST)

விதி மீறி பேசிய கே.சி.பழனிச்சாமிக்கு மாலையா போட முடியும்? அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்

விதியை மீறியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமிக்கு மாலையா அணிவிக்க முடியும் என  அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தாமதம் செய்தால், பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும் என கருத்து தெரிவித்திருந்தார்.
 
இதனையடுத்து கே.சி.பழனிசாமி, கட்சியின் கொள்கைக்கு முரணான வகையில் செயல்பட்டதாக கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அவரை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கினர்.
 
இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கட்சியின் கொள்கைக்கு எதிராக பேசிய கே.சி.பழனிச்சாமிக்கு மாலையா அணிவிக்க முடியும் என ஆவேசமாக பேசினார். மேலும் கே.சி. பழனிச்சாமி நீக்கத்தின் பின்னணியில் யாரும் இல்லை என்று கூறினார்.