1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 6 அக்டோபர் 2023 (11:06 IST)

பாஜக, செய்தித் தொடர்பாளர் போல் பரப்புரை செய்வதா? ஆளுனருக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்..!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை படிக்காமல், பாஜக, ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் போல் பரப்புரை செய்வதா? என தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவிக்கும் அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
திருப்பத்தூர், நாயக்கனேரி ஊராட்சி மன்ற பட்டியலினத் தலைவர் பதவியேற்பு பற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறிய அமைச்சர் துரைமுருகன், ‘தமிழ்நாட்டின் சமூகநீதியால் பிறந்துள்ள அமைதிக்கு, குந்தகம் விளைவித்து வருவது ஆளுநருக்கு அழகல்ல என்றும் கூறினார்,.
 
மேலும் அரசியல் பேச வேண்டும் என்றால், அரசியல் தலைவராக மாறி தாராளமாக ஆளுநர் தன் கருத்தை தெரிவிக்கட்டும் என்றும், அதற்கு பதிலடி கொடுக்க நாங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுமே தயாராக இருக்கிறார்கள் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்,
 
Edited by Siva