புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 26 அக்டோபர் 2020 (19:48 IST)

அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்; மருத்துவமனை விரையும் அமைச்சர்கள்!

சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மோசமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

கடந்த 13ம் தேதி தனது சொந்த ஊர் சென்றுக் கொண்டிருந்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு திடீரென மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலன் மோசமாகி வந்த நிலையில் அவருக்கு எக்மோ கருவி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக சென்று அமைச்சரை நலம் விசாரித்து வந்தார்.

எனினும் அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் திடீரென மருத்துவமனை விரைந்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.