Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழகத்திற்கு நல்ல தீர்ப்பு: காவிரி குறித்து சி.வி சண்முகம்!

Last Updated: வெள்ளி, 18 மே 2018 (18:11 IST)
காவிரி வழக்கில் திருத்தப்பட்ட மத்திய அரசின் வரைவுத் திட்டத்தை, உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, காவிரி தொடர்பான வழக்குகளை இன்று முடித்து வைத்துள்ளது.  
 
இந்த அமைப்பின் பெயர் காவிரி மேலாண்மை வாரியம் அல்ல காவிரி மேலாண்மை ஆணையம். மேலும் இந்த ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் செயல்படும். நீர் பங்கீடு தொடர்பான இறுதி முடிவை ஆணையம்தான் எடுக்கும். 
 
இதில் தலையிட மத்திய அரசிற்கு உரிமை இல்லை. அதேபோல் காவிரியில் அணை கட்ட கர்நாடகத்திற்கோ, தமிழகத்திற்கோ உரிமை இல்லை. மாதந்தோறும் அணையின் நீர் இருப்பு விவரத்தை ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
 
இது குறித்து, சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் கூறியுள்ளதாவது, காவிரி வழக்கில் தமிழக மக்களும், விவசாயிகளும் எதிர்பார்த்தபடி நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. மேலும், தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :