திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 ஏப்ரல் 2022 (12:14 IST)

வினாத்தாள் வெளியாவதை தடுக்க நடவடிக்கை! – அன்பில் மகேஷ் உறுதி!

இன்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறும் நிலையில் வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் தற்போது திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகின்றது. இன்று 12ம் வகுப்பிற்கான கணித தேர்வு நடைபெற இருந்த நிலையில் நேற்று அதன் வினாத்தாள்கள் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் புதிய வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு இமெயில் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் “பள்ளித் தேர்வுக்கான வினாத்தாள் வெளியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜன்னல் இல்லாத அறைகளில் வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.