அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் காய்ச்சல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
அன்பில் மகேஷ் அவர்களுக்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருப்பதாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்
அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை வழங்கி வருவதாகவும் அவர் தற்போது நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன