திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 12 அக்டோபர் 2022 (14:56 IST)

தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம்

Milk
தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஒரு லிட்டர் பசும்பால் ரூபாய் 42க்கும் ஒரு லிட்டர் எருமைப்பால் ரூபாய் 50ல்கும் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை விடுத்து பல மாதங்களாக பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது
 
ஆனால் இது குறித்து இன்னும் பேச்சு வார்த்தை கூட தமிழக அரசு அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran