இன்று முதல் பால், தயிர் விலை உயர்வு!! ஒரு லிட்டருக்கு எவ்வளவு உயர்ந்தது?
தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் இன்று முதல் பால் மற்றும் தயிர் விலையை உயர்த்தியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னணி பால் நிறுவனமான திருமலை நிறுவனத்தின் பால் லிட்டருக்கு ரூ. 58-ல் இருந்து ரூ. 62 ஆக உயர்ந்துள்ளது. முழு க்ரீம் பால் லிட்டருக்கு ரூ. 66-ல் இருந்து ரூ. 70 என உயர்ந்துள்ளது.
மேலும் திருமலை பால் நிறுவனத்தின் 450 கிராம் தயிர் ரூ. 4 உயர்த்தப்பட்டு ரூ. 36 என விற்பனையாகி வருவதாகவும், 200 மி.லி. மோர் பாக்கெட் ரூ. 4 உயர்த்தப்பட்டு ரூ. 10 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் ஹெரிடேஜ் நிறுவனத்தின் 457 மி.லி. பால் ரூ. 31-ல் இருந்து ரூ. 33-ஆகவும், 950 மில்லி பால் ரூ. 62-ல் இருந்து ரூ. 64 ஆகவு உயர்த்தப்பட்டுள்ளது.
டோட்லா நிறுவனத்தின் முழு க்ரீம் பால் லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி ரூ. 70 ஆகவும், சாதாரண தரப்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி 62 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இருப்பினும் ஆவின் பால் உயர்த்தப்படவில்லை என்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Edited by Mahendran