1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2017 (22:07 IST)

கமல், விஜய், ஷங்கருக்கு கிடைத்த பட்டம் விஜயகுமாருக்கு!!

சென்னை மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம், ஏ.சி.சண்முகம் அவர்களுக்கு சொந்தமானது. புதிய நீதிக்கட்சியின் தலைவராக உள்ள ஏ.சி.சண்முகம் தனது பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திரையுலக பிரமுகர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி வருவது வழக்கம்




 


இதுவரை கமல்ஹாசன், விஜய், இயக்குனர் ஷங்கர் உள்பட பல திரையுலக பிரமுகர்களுக்கு டாக்டர் பட்டம் இந்த பல்கலைகழகத்தால் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு பிரபல குணசித்திர நடிக விஜயகுமாருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க எம்ஜிஆர் பல்கலை திட்டமிட்டுள்ளது.

கடந்த 1973ஆம் ஆண்டு 'பொண்ணுக்கு தங்க மனசு' என்ற படத்தில் சிவகுமாரின் நண்பராக அறிமுகம் ஆன விஜயகுமார் சமீபத்தில் வெளியான 'குற்றம் 23' படம் வரை நூற்றுக்கணக்கான படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் செய்து வரும் கலையுலக சேவையை பாராட்டி இந்த டாக்டர் பட்டம் தற்போது வழங்கப்படவுள்ளது.