திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 1 மார்ச் 2021 (15:27 IST)

திடீரெனப் பற்றி எரிந்த எம்ஜி ஆர் சிலை… திருப்பத்தூரில் பரபரப்பு!

திருப்பத்தூரில் உள்ள எம் ஜி ஆர் சிலையில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட கெஜல்நாயக்கன்பட்டி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் வர உள்ளதால் தேர்தல் விதிமுறைகளை உள்ளிட்டு சிலைக்கு கருப்பு துணி சுற்றப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 68-வது பிறந்தநாளையொட்டி அப்பகுதியில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். அப்போது அதில் இருந்து உருவான தீப்பொறி பட்டு சிலையில் இருந்து கருப்புத்துணி பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. அருகில் இருந்தவர்கள் சிலை மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.இது சம்மந்தமாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.