வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 29 டிசம்பர் 2023 (08:03 IST)

எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த்.. டிசம்பர் மாதம் மறைந்த அரசியல் தலைவர்கள்..!

சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் ஆகிய மூன்று பேருமே டிசம்பர் மாதத்தில் காலமாகி உள்ளனர் என்ற அபூர்வ ஒற்றுமை அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

மக்கள் திலகம் எம்ஜிஆர் டிசம்பர் 24ஆம் தேதி காலமானார். புரட்சி தலைவி ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். இந்த நிலையில் டிசம்பர் 28ஆம் தேதி புரட்சி கலைஞர் விஜயகாந்த் காலமாகியுள்ளார்.

மூவரும் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் என்பதும் மூவரும் ஆளுமையில் உள்ள தலைவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மூவருமே ஏழை எளிய மக்களுக்காக பாடுபட்டவர்கள் என்றும் குறிப்பாக மூவருமே ஏழை எளிய மக்களின் பசியை ஆற்றியவர்கள் என்பதில் ஒற்றுமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்த எம் ஜி ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய மூவருமே டிசம்பர் மாதத்தில் மறைந்துள்ள ஒற்றுமையை  பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

Edited by Siva