1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 27 ஜூலை 2017 (04:30 IST)

எம்.ஜி.ஆர் உருவம் பதித்த நாணயம்: ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு

புரட்சித்தலைவரும், அதிமுகவை தோற்றுவித்தருமான எம்ஜிஆர் உருவம் பதித்த நாணயம் வெளியிட வேண்டும் என்று முதல்வராக இருந்தபோது மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை தற்போது மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதற்காக மோடியின் அரசுக்கு ஓபிஎஸ் நன்றி தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:



 
 
புரட்சி தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிட வேண்டும் என்று நான் முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்த போது, கடந்த 05.01.2017 அன்று மத்திய அரசுக்கு தமிழக சார்பில் கடிதம் எழுதினேன்.
 
எனது வேண்டுகோளை ஏற்று, புரட்சி தலைவர் அவர்களின் நூற்றாண்டு விழாவில், அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் கடந்த 17.7.2017 அன்று ஒப்புதல் கடிதம் எனக்கு அனுப்பியிருக்கிறது.
 
தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் பாரத ரத்னா, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் உருவம் பொறித்த நாணயம் வெளியிட முடிவு செய்ததற்காக பிரதமர் மோடி அவர்களுக்கும், அவரது தலைமையிலான மத்திய அரசுக்கும், தமிழக மக்களின் சார்பாகவும், ஒன்றரை கோடித் தொண்டர்களின் சார்பாகவும், ஜெயலலிதா வழி நின்று, மனம் நிறைந்த மகிழ்ச்சியையும், கோடான கோடி நன்றி
 
இவ்வாறு ஓபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.