Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓபிஎஸ் அணியில் மேலும் ஓர் எம்எல்ஏ: மேட்டூர் தொகுதி செம்மலை ஆதரவு!

ஓபிஎஸ் அணியில் மேலும் ஓர் எம்எல்ஏ: மேட்டூர் தொகுதி செம்மலை ஆதரவு!


Caston| Last Modified செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (10:07 IST)
முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் ஒரு அணியும் அதிமுகவில் உருவாகி தமிழக அரசியல் களத்தை மிகவும் பரபரப்பாக வைத்துள்ளது. தினமும் சசிகலா பக்கம் இருக்கும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தப்பித்து வந்து பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிப்பது வாடிக்கையாக உள்ளது.

 
 
தமிழக சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க இதுவரை அவரது அணியில் அதிகாரப்பூர்வமாக அவரையும் சேர்த்து 8 எம்எல்ஏக்கள் தான் இருந்தார்கள். ஆனால் இன்று புதிதாக ஒரு சேர்ந்து ஓபிஎஸ் அணியின் எண்ணிக்கை 9-ஆக மாறியுள்ளது.
 
மேட்டூர் தொகுதி எம்எல்ஏ செம்மலை இன்று தனது ஆதரவை கிரீன்வேஸ் சாலை வீட்டில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தெரிவித்துள்ளார். இதனால் அதிமுக எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :