செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 16 ஜூலை 2022 (10:49 IST)

முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை! – மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட அரபிக்கடலோரா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் நீர்நிலைகள் நிரம்பிய நிலையில் வெளியேற்றப்படும் உபரிநீரால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வந்த நிலையில் இன்று அணை அதன் அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதனால் முதற்கட்டமாக 16 கண் மதகு வழியாக 25,000 கனஅடி நீரும், நீர்மின் நிலையங்கள் வழியாக 25,000 கனஅடி நீரும் திறந்துவிடப்பட உள்ளது. மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.