பருவமழையுடன் சேர்ந்து வரும் எல் நினோ; வானிலை மையம் எச்சரிக்கை
தென்மேற்கு பருவமழை பிற்பகுதியில் எல் நினோ உருவாகும் என இந்தியா வானிலை ஆய்வு அமையம் எச்சரித்துள்ளது.
கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கியது. இதனால் கேரளா மற்றும் அதை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அடுத்த 3 நாட்களுக்குள் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தென்மேற்கு பருவமழையின் பிற்பகுதியில் எல் நினோ உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடலில் எல் நினோ நீரோட்டம் உருவானும் அது பலவீனமாக தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடல் சீற்றம் சற்று குறைவாகதான் இருக்கும். புயல் உருவாகும் வாய்ப்பு குறைவுதான். மேலும் இந்த ஆண்டு பருவமழை சராசரி 100 சதவீதம் பெய்யும் என தெரிவித்துள்ளனர்.