திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (11:59 IST)

தமிழகத்தின் 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

வங்கக் கடலில் தோன்றிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  வலுப்பெற்று  வங்கதேசம் அருகே கரையை கடக்க இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் இதன் தாக்கம் தமிழகத்திலும் சில இடத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சற்று முன்னர் வானிலை ஆய்வு மையம் எடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில் தமிழகத்தின் ஏழு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
சென்னை நாகப்பட்டினம் கடலூர் எண்ணூர் காட்டுப்பள்ளி பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் ஒன்றாம் என் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட உள்ளது 
 
மேலும்  மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது
 
Edited by Siva