மீனாட்சியம்மன் ஆலயத்தில் தீவிபத்து ஏற்பட சிவன், பார்வதியின் கோபமே காரணம் – மதுரை ஆதினம்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கு, சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் கோபமே காரணம் என மதுரை ஆதினம் அருணகிரிநாதர் கூறியுள்ளார்.
மதுரை ஆதினத்தை சேர்ந்த அருணகிரிநாதர் சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது இந்து சமய அறநிலையத்துரையின் அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியின் கோபமே மீனாட்சியம்மன் ஆலயத்தில் தீ பிடிக்க காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
2500 ஆண்டுகால பழமையான மதுரை ஆதினத்திற்கு உரிய மரியாதையை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் அளிப்பதில்லை எனவும் குற்றம் சாட்டினார். மேலும் இந்த விபத்துக்கு காரணமான இந்து சமய அறநிலையத்துரை முற்றிலுமாக ஒழிக்க பட வேண்டும் என மதுரை ஆதீனம் கூறினார்.