வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.vadivel
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (00:24 IST)

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட், லெக்கின்ஸ்க்கு தடை

மருத்துவக் கல்லூரிகளில் ஜீன்ஸ் பேண்ட், டிசர்ட், லெக்கின்ஸ்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

 
தமிழகத்தில், சுமார் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளும், ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரிகளில், அரசு அறிவித்தப்படி எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் முதல் தேதி தொடங்குகின்றன.
 
இந்த நிலையில், புதிய வகுப்பிற்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு சில கட்டுப்பாடுகளை மருத்துவ கல்வி இயக்ககம் விதித்துள்ளது.
 
அதன்படி, மாணவர்கள், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டி சர்ட் போன்ற உடைகளை அணியக்கூடாது என்றும், மாணவிகள் லெகின்ஸ் அணியக் கூடாது என்றும் தடை விதித்துள்ளது.
 
மேலும், மாணவர்கள் பேன்ட், முழுக்கை சட்டை அணிந்து, இன் செய்து, ஷூ அணிந்து வரவேண்டும் என்றும், மாணவிகள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற உடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, மாணவிகள் தங்களது தலை முடியை விரித்து விட்டபடி வராமல் இறுக்கமாகக் கட்டிக் கொண்டு வர வேண்டும் என்றும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும், ராக்கிங் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் கல்லூரியை விட்டு உடனே நீக்கப்படுவார்கள் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.