திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 26 மே 2022 (09:03 IST)

கெடு முடிந்தது: போராட்ட தேதியை அறிவித்தார் அண்ணாமலை!

annamalai
மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கான வரியை குறைத்த நிலையில் குஜராத் ராஜஸ்தான் ஒடிசா உள்பட பல மாநிலங்கள் வாட் வரியை குறைத்தன
 
ஆனால் தமிழ்நாடு உள்பட ஒரு சில மாநிலங்கள் வாட் வரியை குறைக்க முடியாது என கூறி விட்டது 
 
இந்த நிலையில் தமிழக அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் 72 மணி நேரம் கெடு கொடுப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்
 
 இந்த நிலையில் தற்போது கெடு முடிவடைந்த நிலையில் போராட்ட தேதியை அண்ணாமலை அறிவித்துள்ளார் 
 
பெட்ரோல் டீசலுக்கான விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து மே 31-ஆம் தேதி சென்னை கோட்டையை முற்றுகையிட போவதாக அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது