வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 18 செப்டம்பர் 2015 (06:17 IST)

இடதுக்கீட்டுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு பாமக சார்பில் மலர் அஞ்சலி

தமிழகத்தில், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி, பலியான 21 தியாகிகளுக்கு பாமக சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
 

 
தமிழகத்தில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி, கடந்த 1987ஆம் ஆண்டு வன்னியர் சங்கம் சார்பில் நடந்த தொடர் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 21 பேர் பலியானார்கள்.
 
அவர்களது நினைவு தினத்தை, வன்னியர் சங்கம் சார்பில் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் 28ஆவது ஆண்டு நினைவு வீரவணக்க நாள்  திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது.
 
அப்போது, இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 பேரின் உருவப்படங்களுக்கு,  பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி, மற்றும் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டபலர் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினர்.