Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜோடியாக பூங்காவிற்குள் நுழைய திருமண சான்றிதழ்; தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அதிரடி

<a class=TNAU Botanical Garden" class="imgCont" height="417" src="http://media.webdunia.com/_media/ta/img/article/2018-01/29/full/1517231138-035.jpg" style="border: 1px solid #DDD; margin-right: 0px; float: none; z-index: 0;" title="" width="740" />
Last Updated: திங்கள், 29 ஜனவரி 2018 (18:35 IST)
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவிற்கு பொழுது போக்க வரும் காதல் ஜோடிகளை தடுக்க ஜோடியாக வருவர்களிடம் திருமண சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தாரவியல் பூங்காவிற்குள் ஜோடியாக வருபவர்களிடம் ஆதார் அட்டை மட்டுமின்றி அவர்களுடைய திருமண சான்றிதழையும் காட்டினால்தான் அனுமதிக்கப்படுகின்றனர். 
 
பூங்காவிற்கு வரும் காதல் ஜோடிகளை தடுக்க பாதுகாப்பு அதிகாரிகள் இந்த முறையை பின்பற்றி வருகின்றனர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பேராசரியரான எம்.கண்ணன் அறிக்கையை மேற்கொள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
 
குடும்பங்கள் தவிர, ஜோடியாக வந்தால் திருமண சான்றுடன் வருபவர்கள் மட்டுமே பூங்காவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பூங்காவிற்குள் நுழைய தடையில்லை என கூறப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :