செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 26 மார்ச் 2020 (12:33 IST)

காலையில மட்டும்தான் இனிமே கிடைக்கும் - காய்கறி விற்பனை நேரம் குறைப்பு!

கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நேரமும் குறைக்கப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600 ஐ தாண்டியுள்ள நிலையில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால், மளிகை பொருட்கள் கிடைக்கும் என அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் சாலைகளில் திரியும் பலரும் பால், காய்கறி வாங்க போவதாக தொடர்ந்து ஏதாவது சாக்கு போக்கு சொல்லிக் கொண்டே இருப்பதால் காவலர்கள் ஊரடங்கை கடைபிடிக்க செய்வதற்கு மிகவும் சிரமப்பட வேண்டிய சூழல் உள்ளது.

அதனால் காய்கறி மற்றும் பால் விற்பனைக்கான நேரத்தை திட்டமிட்டுள்ளனர். மொத்த காய்கறி சந்தைகளை தவிர சிறிய காய்கறி சந்தைகள் அதிகாலை 4 மணிக்கு தொடங்கு 9 மணி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் பால் விற்பனையும் அதிகாலை 3.30 முதல் தொடங்கி காலை 9 மணிக்கு முடிக்கப்படும் என பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்தது. ஆனால் தமிழக அரசு ஆவின் பால் காலை முதல் இரவு வரை அனைத்து நேரங்களில் ஆவின் பாலகங்களில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. பால் தட்டுபாடு ஏற்படும் என மக்கள் பயப்பட தேவையில்லை என அரசு தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றுவதை கட்டுப்படுத்த முடியும் என கூறப்படுகிறது.