மெரினாவில் ஆண்ட்டி கற்பழித்து கொலை: அம்பலமான திடுக்கிடும் உண்மைகள்

aunty
Last Updated: வெள்ளி, 9 நவம்பர் 2018 (17:11 IST)
மெரினாவில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளது.
 
கடந்த ஞாயிரன்று மெரினாவில் காலையில் வாக்கிங் சென்றவர்கள் மணலில் பாதி முடப்பட்ட பெண்ணின் சடலம் ஒன்றை கண்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அண்ணாசதுக்கம் போலீஸாருக்கு உடனடியாக தகவல் அளித்துள்ளனர். 
 
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீஸார்  சடலத்தை மீட்ட போது உடலெங்கும் காயங்களும், முகத்தில் பலமாக தாக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. 
marina
பின்னர் போலீஸார் தங்களது விசாரணையை துவங்கியுள்ளனர். அந்த பெண் இறந்து கிடந்த இடத்தில் அவரது மொபைல் போன், 4 ஜோடி செருப்பு, மது பாட்டில்கள் இருந்துள்ளது.
 
இந்த போன் நம்பரை வைத்து திருவல்லிக்கேணியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வினோத்குமார், பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சூர்யா ஆகியோரிடம் போலீஸார் குடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
 
இதில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் கலைச் செல்வி என்பது தெரியவந்தது. மதுரையை சேர்ந்த கலைச்செல்வி புருஷனிடம் ஏற்பட்ட சண்டையின் காரணமாக அவரை பிரிந்து சென்னைக்கு வந்துள்ளார். சென்னை மெரினா பீச்சில் இவர் விபச்சாரம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். அப்போது தான் அவருக்கு வினோத்குமாரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
 
அவ்வப்போது வினோத்குமாரும் அவரது நண்பர் சூர்யாவும் கலைச்செல்வியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒருசமயம் கலைச்செல்வி தனது தோழி ஒருவரை வினோத்குமாரிடமும் அவரது நண்பர்களிடமும் அறிமுகம் செய்துள்ளார்.
 
அந்த பெண் அழகாக இருந்ததால், வினோத்குமார் மற்றும் அவரது நண்பர் சூர்யா, கலைச்செல்வியுடன் பழகுவதை நிறுத்திக்கொண்டனர். இதனால் கலைச்செல்வி வினோத்குமாருக்கு போன் செய்து ஏன் என்னிடம் பழக மாட்டிங்கிறீர்கள் என கேட்டுள்ளார். புதுசு வந்த உடனே பழச மறந்துட்டீங்களே என கேட்டுள்ளார்.
 
கடந்த சனிக்கிழமையன்று கலைச்செல்வி, வினோத்குமார், சூர்யா ஆகிய மூவரும் மெரினாவில் மது அருந்தியுள்ளர். பின்னர் மூவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது கலைச்செல்வி என்னுடன் ஏன் பழைய மாதிரி பழக மாட்டிங்கிறீர்கள் என மீண்டும் கேட்டுள்ளார்.
 
போதையில் இருந்த வினோத்குமார், சூர்யா இதனால் கடுப்பாகி பீர் பாட்டிலை எடுத்து கலைச்செல்வியை அடித்து கொலை செய்து அவரை அங்கேயே புதைத்துவிட்டு சென்றுள்ளனர். போலீஸார் அவர்களிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :