மரோடானா வாட்ச்சை திருடி அசாமில் பதுங்கிய ஆசாமி! – மீட்ட போலீஸ்!
மறைந்த பிரபல கால்பந்து வீரர் மரடோனா பயன்படுத்திய கடிகாரத்தை திருடிய நபர் அசாமில் பிடிபட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் டியாகோ மரடோனா. அர்ஜெண்டினா கால்பந்து வீரரான மரடோனா கடந்த சில ஆண்டுகள் முன்னதாக இறந்த நிலையில் அவர் பயன்படுத்திய பொருட்களை துபாயில் உள்ள நிறுவனம் ஒன்று பாதுகாத்து வந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் காவலராக வாஹித் உசேன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அங்கு பாதுகாக்கபட்ட மரடோனா பயன்படுத்திய கடிகாரத்தை திருடிக் கொண்டு தப்பியுள்ளார். அவர் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் இந்தியாவில் அசாமில் பதுங்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அசாம் போலீஸார் வாஹித்தை கைது செய்து மரடோனாவின் கடிகாரத்தை மீட்டுள்ளனர்.