ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2023 (11:41 IST)

இன்று காவல்துறையிடம் ஆஜராகாத மன்சூர் அலிகான்: விளக்கம் அளித்து கடிதம்..!

Mansoor Alikhan
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மன்சூர் அலிகான் பேசியதாக கூறப்படும் நிலையில் அவர் மீது இரண்டு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை செய்ய இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இன்று காவல்துறையினரிடம் மன்சூர் அலிகான் ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர் தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் எனவே இன்று நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.  

ஏற்கனவே நடிகர் மன்சூர் அலிகான்  முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் முன்ஜாமீன் மனு இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திடீரென அவர் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran