செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 28 மே 2019 (20:42 IST)

பைக்கில் சென்றவரின் கழுத்தை அறுத்த மாஞ்சா கயிறு

தண்டையார்பேட்டை அருகே உள்ள வைத்தியநாதன் பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தவரின் கழுத்தில் மாஞ்சா கயிறு அறுத்ததால் அவர் கீழே விழுந்தார். கயிறு கழுத்தில் சிக்கிய நிலையில் ரத்தம் வழிய சாலையில் கிடந்தவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை நகர பகுதிகளில் பட்டம் விடுதல் மற்றும் அதற்காக கண்ணாடி துகள் கலந்த மாஞ்சா கயிறுகளை உபயோகித்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. எனினும் தற்போது விடுமுறை என்பதால் பல சிறுவர்களும், இளைஞர்களும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த ஆர் கே நகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.