புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 31 ஜனவரி 2020 (15:44 IST)

மச்சினிச்சியின் குளியல் வீடியோவை மனைவிக்கு அனுப்பிய காமுகன்!

சென்னையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மச்சினிச்சியின் குளியல் வீடியோவை அவரது குடும்பத்தாருக்கு அனுப்பிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் தினேஷ். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வரும் அவருக்குத் திருமணம் ஆகி 7 வயதில் ஒரு மகள் இருக்கிறார். குடிக்கு அடிமையான இவர் அடிக்கடி தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதைக் கேட்ட அவரது உறவினர்களையும் அவமரியாதை செய்துள்ளார். இதனால் கோபித்துக் கொண்ட அவரது மனைவி தன் தாய் வீட்டுக்கே சென்றுள்ளார்.

இதில் அதிருப்தியடைந்த தினேஷ் தனது மனைவிக்குப் போன் வீட்டுக்கு வராவிட்டால் ’உன் தங்கை குளிப்பதை நான் எடுத்து வைத்துள்ளேன். அதை இணையதளத்தில் வெளியிடுவேன்’ என மிரட்டியுள்ளார். சொன்னது போல் மனைவியின் உறவினர்கள் இருவருக்கு வாட்ஸ் ஆப்பில் குளியல் வீடியோவை அனுப்பியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ந்த குடும்பத்தார் காவல்துறையில் புகார் கொடுக்க, தினேஷை கைது செய்துள்ளனர் போலிஸார். மச்சினிச்சி வீட்டுக்கு வரும்போது அவருக்கு தெரியாமல் அந்த வீடியோக்களை எடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.