Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஐயா.. எனக்கும் என் பொண்டாட்டிக்கும் சண்டை - வங்கி மேனஜருக்கு வந்த கடிதம்


Murugan| Last Modified வியாழன், 22 டிசம்பர் 2016 (18:11 IST)
ரூ.500 மற்றும் 1000 ஆகிய நோட்டுகள் செல்லாது, வங்கியில் ரூ.5 ஆயிரம் மட்டுமே செலுத்த முடியும் என மத்திய அரசு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் வேளையில், ஒருவர் ஒரு வங்கி மேலாளருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

 

 
பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வருகிற 30ம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்த வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. அந்த கெடு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், திடீரென ரூ.5 ஆயிரத்திற்கு மேல் செலுத்த முடியாது என சமீபத்தில் மத்திய அரசு கூறியது. அதன்பின் அந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொண்டது.
 
இப்படி மத்திய அரசு அடிக்கடி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருவது மக்களுக்கு அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், சென்னையில் உள்ள செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை மேலாளருக்கு ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் இடையே சண்டை எனவும், கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு சென்று விட்ட அவர், ரூ.5 ஆயிரம் பணத்தை வீட்டில் வைத்து விட்டு சென்றுவிட்டதாகவும், அதை வங்கியில் டெபாசிட் செய்ய அனுமதிக்கும்படி கேட்டு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
 
படிப்பவரை சிரிக்க வைக்கும் இந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
இதில் மேலும் படிக்கவும் :