1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (11:13 IST)

தோசைக்கல்லால் பாட்டியைத் தாக்கிக் கொன்ற பேரன்… போலிஸார் தீவிர தேடுதல்!

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்து வந்த சுசீலா என்ற பாட்டியை அவரது பேரன் ஜெகன் தோசைக்கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளார்.

திருவள்ளூரில் வசிக்கும் சுசீலா பாட்டியை பார்க்க சென்னை வானகரத்தைச் சேர்ந்த அவரின் மகன் வழிப் பேரனான ஜெகன்  வந்துள்ளார். வந்த இடத்தில் பாட்டிக்கும் பேரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குடி போதையில் இருந்த ஜெகன் பாட்டியின் தலைமீது தோசைக்கல்லை தூக்கிப் போட்டுள்ளார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் இறந்து கிடந்த பாட்டியைப் பார்த்து போலிஸாருக்குத் தகவல் சொல்ல தலைமறைவான ஜெகனை இப்போது போலிஸார் தேடி வருகின்றனர்.