புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 16 பிப்ரவரி 2020 (09:33 IST)

ஒருதலைக்காதல்! பெண்ணின் அண்ணனைக் கொலை செய்த கொடூரன் !

கொலையாளி மணிகண்டன்

கோவையில் உள்ள கிணத்துக்கடவு என்ற பகுதியில் வசித்து வந்த தினேஷ் குமார் என்பவரை அதேப் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் எனும் ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். இவருக்கு ஒரு தங்கை உள்ளார்.இவர்களின் உறவினரான மணிகண்டன் என்பவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் ஒரு தலையாக தினேஷ் குமாரின் தங்கையைக் காதலித்து வந்துள்ளார். ஆனால் அவர் அந்த பெண்ணுக்கு ஒரு வகையில் அண்ணன் முறை என்பதால் இதற்கு அந்த பெண் சம்மதிக்கவில்லை.

இது சம்மந்தமாக தினேஷ் குமார் மணிகண்டனை தனியாக அழைத்து அறிவுரைக் கூறியுள்ளார். ஆனாலும் கேட்காத மணிகண்டன் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்புவது போன்ற தொல்லைகளை செய்து வந்துள்ளார். இது சம்மந்தமாக தினேஷ் குமார், மணிகண்டனை அழைத்து கோபமாக வாக்குவாதம் செய்ய அப்போது மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து அவரைக் குத்தியுள்ளார்.

இதனால் தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, போலீஸார் தலைமறைவான மணிகண்டனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.