Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சாக்லெட் வாங்கி கொடுத்து சிறுமியிடம் தகாத செயலில் ஈடுபட்ட மெக்கானிக்!

சாக்லெட் வாங்கி கொடுத்து சிறுமியிடம் தகாத செயலில் ஈடுபட்ட மெக்கானிக்!

செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (15:59 IST)

Widgets Magazine

சேலம் மாவட்டத்தில் 9 வயது சிறுமிக்கு மெக்கானிக் ஒருவர் சாக்லெட் வாங்கி கொடுத்து அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சேலம் மாவட்டம் கொங்கவல்லி அருகே உள்ள ஆணையாம்பட்டி புதூரை சேர்ந்த 28 வயதான தியாகராஜன் என்பவர் அங்கு இருசக்கர வாகனம் பழுது நீக்கும் மெக்கானிக் கடை வைத்துள்ளார்.
 
இவர் நேற்று முன்தினம் தனது கடைக்கு எதிரே உள்ள வீட்டில் வசிக்கும் நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து தான் கடை வைத்திருக்கும் கட்டிடத்தின்  மாடிக்கு அழைத்து சென்றுள்ளார்.
 
இதனை அந்த சிறுமியின் தங்கை பார்த்து தனது தாயிடம் கூறியுள்ளார். உடனே அந்த சிறுமியின் தாய் மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அந்த நபர் சிறுமியிடம் தகாத செயலில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். இதனால் அந்த சிறுமியின் தாய் சத்தம் போட அருகில் இருந்த அனைவரும் கூடிவிட்டனர்.
 
அவர் சத்தம் போட்டதும் அந்த மெக்கானிக் தியாகராஜன் மாடியின் பின் பக்க வழியாக எட்டி குதித்து தப்பியோடியுள்ளார். மெக்கானிக் தியாகராஜன் சிறுமியின் உதட்டில் கடித்ததில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமியை சேலம் ஆத்தூர் மருத்துவமனையில் சேர்த்த அவரது தாய் ஆத்தூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மெக்கானிக் தியாகராஜன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

காதலுக்காக ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை தூக்கி எறிந்த இளம்பெண்...

தான் விரும்பியவரை திருமணம் செய்து கொள்வதற்காக, கோடிக்கணக்கான சொத்துக்களை ஒரு இளம்பெண் ...

news

ஆசிரியருடன் பள்ளி மாணவி காதல்: வகுப்பறையிலே உல்லாசம்!

அஸ்ஸாம் மாநிலத்தில் ஆசிரியர் ஒருவர் தனது மாணவி ஒருவருடன் மிகவும் நெருக்கமாக ஆபாசமாக ...

news

பாஜகவுக்கு தனியான ரூ.500 நோட்டு அச்சடிப்பு? காங்கிரஸ் திடுக்கிடும் புகார்

பாஜக கட்சிக்கு தனியாக ரூ.500 நோட்டு அச்சடிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியினர் திடுக்கிடும் ...

news

மாடல் அழகியை கடத்தி, செக்ஸ் அடிமையாக விற்ற நபர்!!

இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகி ஒருவரை ஆன்லைனில் செக்ஸ் அடிமையாக விற்க கடத்தப்பட்ட சம்பவம் ...

Widgets Magazine Widgets Magazine