வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 9 டிசம்பர் 2021 (07:58 IST)

எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசியது யார்? கைது செய்த காவல்துறை!

தமிழக எதிர்க்கட்சி தலைவரை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கார் மீது செருப்பு வீசியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
 
திருவல்லிக்கேணியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தான் எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசியவர் என்பது வீடியோ ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளதை அடுத்து அவரை அண்ணா சதுக்கம் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசியவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளை அடுத்த எடப்பாடி பழனிச்சாமி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற போது அவரது காரை வழிமறித்து அமமுகவினர் செருப்பு வீசினர் என்பது குறிப்பிடத்தக்கது