வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (14:02 IST)

அடுத்தடுத்து இரண்டு சிறுமிகளை திருமணம் செய்த இளைஞர்… போக்ஸோ சட்டத்தில் கைது!

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் இரண்டு சிறுமிகளை திருமணம் செய்த லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் அஜித் குமார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னதாக உறவினர் வீட்டுக்காக செந்துறை வந்த மைனர் பெண்ணை ஆசை வார்த்தைகளால் மயக்கி திருமணம் செய்துள்ளார். இது சம்மந்தமாக போக்ஸோ சட்டத்திலும் கைது செய்யப்ப்ட்டுள்ளார்.

இந்நிலையில் ஜாமீனில் வந்த அவர் மற்றொரு மைனர் பெண்ணையும் இதுபோல திருமணம் செய்துள்ளார். இதையடுத்து வந்த புகாரின் அடிப்படையில் செந்துறை போலிஸார் அவரை மீண்டும் கைது செய்துள்ளனர்.