ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: புதன், 23 மார்ச் 2022 (13:17 IST)

மண்ணுளிப் பாம்பை வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபர் கைது!

பல கோடி மதிப்புள்ள மண்ணுளிப் பாம்பை வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 
 
குமரி மாவட்டம் சாமிநாத புரத்தை சேர்ந்த குமரேசன் சப் இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றி இறந்து விட்டார். இவரது மகன் அரவிந்த் (35) வீட்டில் மண்ணுளிப் பாம்பை பதுக்கி வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.
 
மேலும் வெளிநாட்டுக்கு மண்ணுளிப் பாம்பை கடத்திச் செல்லும் கும்பலுடன் அரவிந்துக்கு தொடர்பு இருக்கலாமா? என்பது குறித்தும் வனத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.