1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 21 டிசம்பர் 2016 (14:46 IST)

தலைமைச் செயலர் வீட்டு ரெய்டு - சைலண்ட் ஆன ஓ.பி.எஸ்.; கொந்தளித்த மம்தா பானர்ஜி

தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் இல்லத்தில், வருமான வரித் துறை சோதனை நடத்திவருவதற்கு மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.


 

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பலகோடி ரூபாய் பணம், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சேகர் ரெட்டி வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.

இந்த ஆவணங்களின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சேகர் ரெட்டி, தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் உடன் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. இதன் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகனராவ்  வீட்டில் நடந்த சோதனைக்கு மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள மம்தா, ”புதுடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலின் இல்லத்தில் இதற்கு முன்பு சோதனை நடத்தப்பட்டது; தற்போது தமிழக தலைமைச் செயலர் இல்லத்தில் நடத்தப்படுகிறது. இந்த பழிவாங்கும், நெறிமுறையற்ற நடவடிக்கை, கூட்டாட்சி அமைப்பை சீர்குலைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ’அமித் ஷா போன்றவர்களின் இல்லத்தில் சோதனை நடத்தப்படாதது ஏன்? இத்தகைய நடவடிக்கையை எடுப்பதற்கு முன்பாக மாநில அரசுடன் கலந்து பேசி, அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கிய பிறகே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.

அனால், மாநிலத்தில் தலைமைச் செயலாளர் இல்லத்தில் வருவான விரித்துறை, அமலாக்கத் துறை உள்ளிட்டோர் சோதனை நடத்தி வருவதற்கு மாநில முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டன அறிக்கையோ, எதிர்ப்போ எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.