மதுரை, திருச்சியை அடுத்து கோவையில் பிரமாண்ட கூட்டம்: கமல் கட்சி முடிவு

Last Modified திங்கள், 16 ஏப்ரல் 2018 (08:59 IST)
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரையில் நடந்த பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். இதன்பின்னர் சென்னையில் மகளிர் தின கூட்டம், அதன் பின்னர் இம்மாதம் 4ஆம் தேதி திருச்சியில் பிரமாண்டமான கூட்டம் ஆகியவற்றை நடத்தினார்.

இந்த நிலையில் மதுரை, சென்னை, திருச்சியை அடுத்து கோவையில் பிரமாண்டமான கட்சி கூட்டத்தை நடத்த கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். இந்த கூட்டம் வரும் மே மாதம் 13ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், இதில் ஒருசில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன


ஏற்கனவே தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டு வரும் வருவதால் கமல்ஹாசனின் கட்சி தேர்தலுக்கு தயாராகிவிட்டதாகவே கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :