வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (11:24 IST)

எஸ்.பி.வேலுமணியை உடனே கைது செய்யணும்! – மக்கள் நீதி மய்யம் அறிக்கை!

சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்திய நிலையில் அவரை கைது செய்ய வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை எதிர்த்து எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பு அதிமுகவினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட எஸ்.பி.வேலுமணியை கைது செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.