வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 28 ஜூன் 2015 (06:01 IST)

ஆர்.கே.நகரில் வாக்களிக்காத வேட்பாளர்கள்: ஜெயலலிதா, மகேந்திரன், டிராபிக் ராமசாமி

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட ஜெயலலிதா, மகேந்திரன், டிராபிக் ராமசாமி போன்ற முக்கிய வேட்பாளர்களுக்கு, அங்கு வாக்களிக்கும் உரிமை இல்லாத காரணத்தினால், அவர்கள் வாக்களிவில்லை.
 

 
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வான வெற்றிவேல் ராஜினாமா செய்ததையடுத்து, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிமுகப் பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். ஜூன் 27ஆம் தேதி மொத்தம் உள்ள 230 வாக்குசாவடிகளில் காலை முதல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கி மாலை முடிந்தது.
 
இந்தத் தேர்தலில் ஒரு வினோதம் என்னவென்றால், இத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோருக்கு இந்த தொகுதியில் வாக்களிக்கும் உரிமை இல்லை.
 
மாறாக, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மத்திய சென்னை தொகுதியிலும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் மற்றும் சமுக ஆர்வலர் டிராபிக் ராமசாமி பெயர் தி.நகர் சட்டசபைத் தொகுதியிலும் உள்ளது. இதனால் இந்த மூன்று முக்கிய வேட்பாளர்களும் வாக்களிக்கமுடியாமல் போனது. ஆனால், பொது மக்கள் ஆர்வமுடன்  வந்து வாக்களித்தனர்.