வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2023 (15:17 IST)

மகாராஷ்டிராவுக்குள் உதயநிதி நுழைய முடியாது: அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா

மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் உதயநிதி ஸ்டாலின் நுழைய முடியாது என அம்மாநில அமைச்சர் மங்கள் பிரபா லோதா என்பவர் கூறியுள்ளார். 
 
அமைச்சர் உதயநிதி சமீபத்தில் சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பாஜகவினா கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் உதயநிதி தனது கருத்தை திரும்ப பெறவிட்டால் அவரை மகாராஷ்டிராவுக்குள் அனுமதிக்க மாட்டோம் என  மகாராஷ்டிரா அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா தெரிவித்துள்ளார். 
 
கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை உதயநிதி புண்படுத்திவிட்டார் என்றும் இந்துக்கள் தங்கள் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கும் அளவுக்கு பலவீனமானவர்கள் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் தனது கருத்து திரும்ப பெற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தலைமை முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு  கடிதம் எழுதி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran