ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜூன் 2020 (15:41 IST)

மார்ச் மாத பேருந்து பாஸை எதுவரை பயன்படுத்தலாம்! போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

மதுரையில் மார்ச் மாதம் எடுத்த மாதாந்திர பயண அட்டையை ஜூன் 15 ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது அவற்றில் ஒன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 50% பேருந்துகள் இயக்கப்படும் என்பதாகும்.

இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 68 நாள்களுக்கு பிறகு அரசுப் பேருந்துகள் இயக்கம் தொடங்கினாலும், பயணிகள் வரத்து குறைவாகவே இருந்தது.  வழக்கமாக 12 லட்சம் முதல் 13 லட்சம் பேர் பயணிக்கும் பேருந்துகளில் நேற்று 1,58,000 பேர் மட்டுமே பயணித்துள்ளனர் என எண்ணிக்கை வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் மதுரை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மார்ச் மாதம் மாதாந்திர பயண அட்டை எடுத்தவர்கள் அதை ஜூன் 15 வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது