செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (07:50 IST)

மதுரை - சென்னை எழும்பூர் விரைவு ரயில் ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Train
தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மதுரையிலிருந்து சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்படுவதாக அதற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்கள், ரயில் நிலையங்களில் உள்ள தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி ஏற்கனவே வெளியானது.

தற்போது மதுரை - சென்னை எழும்பூர் அதி விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று இரவு 10.05 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்படுகிறது.

ஏற்கனவே நேற்று இரவு 8.50 மணிக்கு மதுரையிலிருந்து சென்னை புறப்படும் ரயிலும் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva