வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 21 ஜனவரி 2017 (18:58 IST)

வாடிவாசல் முன் மக்கள் போராட்டம்

மதுரை அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெறும் என்று அறிவிக்கப்பட்டாலும், நிரந்தர சட்டம் பிறப்பிக்கும் வரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று வாடிவாசல் முன் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


 


 
நாளை மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
இதை தொடங்கி வைப்பதற்காக இன்று இரவே தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மதுரை செல்வார் எனத் தெரிகிறது. இதற்காக வாடி வாசலை தூய்மை படுத்தும் பணிகளும் நிறைவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் மெரீனாவில் போராடும் இளைஞர்கள், எங்களுக்கு இந்த அவசர சட்டம் வேண்டாம் என்றும், ஜல்லிக்கட்டு மீதான தடை முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் அதுவரை எங்கள் போராட்டத்தை தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.
 
இவர்களை தொடர்ந்து வாடிவாசல் மக்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் உள்ள அனைவரின் கோரிக்கை ஒன்றாகதான் உள்ளது. அவசர சட்டம் வேண்டாம், ஜல்லிக்க்கட்டு மீதான தடையை முழுமையாக நீக்க வேண்டும் என்பதுதான். வாடிவாசல் மக்களிடம் காவல்துறையினர் மற்றும் மதுரை ஆட்சியரின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.