1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (16:12 IST)

சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்தவருக்கு ஒமிக்ரான் பாதிப்பா?

சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த பயணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா என்பதை கண்டறிய சோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் கண்டிப்பாக சோதனை செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த ஒருவர் சிங்கப்பூரில் இருந்து இன்று மதுரை விமான நிலையத்தில் விமானம் மூலம் வந்தார்.
 
அவருக்க்கு பரிசோதனை செய்தபோது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய மரபியல் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவருடன் பயணம் செய்த அவருடைய மனைவி மற்றும் மகன் ஆகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்
 
வெளிநாடுகளில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி வந்த பயணிகள் 6 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது