சிறுபான்மையினர் என்றாலே சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களா? நீதிமன்றம் கேள்வி
சிறுபான்மையினர் என்றாலே சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களா? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பட்டு தேவானந்த் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த காவலர் ஹாஜா சரீஃப் தனக்கான பண பலன் பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, காவலர் ஹாஜா சரீஃப் சிறுபான்மையினர் என்பதால், அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அவர் அடைந்த மனவேதனையை நீதிமன்றதால் உணர முடிகிறது என்றும், சிறுபான்மையினர்/இஸ்லாமியர் என்றாலே சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் என்ற கருத்து நிலவுகிறது என்றும், இது ஏற்க்கதக்தல்ல என்றும் நீதிபதி வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களும், அரசு அதிகாரிகளும் தற்காலத்திற்கு ஏற்றார் போல் தங்களது சிந்தனைகள், மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், காவலர் ஹாஜா சரீஃப்-க்கு பணப்பலன், பதவி உயர்வுகளை வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பட்டு தேவானந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Edited by Mahendran