மதுரை ஜல்லிக்கட்டை யார் நடத்த வேண்டும்? உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
மதுரை ஜல்லிக்கட்டை யார் நடத்த வேண்டும்? என்பது குறித்த முக்கிய உத்தரவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சற்றுமுன் பிறப்பித்துள்ளது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நாங்கள்தான் நடத்துவோம் என பல தரப்பினர் மாவட்ட நிர்வாகத்தில் முறையிட்டது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது
இந்த வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களக நடந்து வந்த நிலையில் தற்போது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சற்றுமுன் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தர்வின்படி மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகமே இணைந்து நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டில் எவ்வித சாதி, மதத்தையும் புகுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளது.
இதுவரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தென்கால் பாசன விவசாயிகளின் சங்க நிர்வாகிகள் நடத்தி வந்த நிலையில், மதுரை மாவட்ட நிர்வாகமே நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran