1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2022 (18:03 IST)

நீதிமன்ற அவமதிப்பு..! சவுக்கு சங்கருக்கு சிறை தண்டனை!

Savuku Sankar
யூட்யூப் சேனலில் நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய சவுக்கு சங்கருக்கு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரபல யூட்யூபராகவும், பத்திரிக்கையாளராகவும் இருந்து வருபவர் சவுக்கு சங்கர். இவரது சர்ச்சைக்குரிய அரசியல் கருத்துகளுக்காக அடிக்கடி ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறார். சமீபத்தில் யூட்யூப் பேட்டி ஒன்றில் பேசிய அவர் நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இதுகுறித்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி நீதிமன்றம் தானாகவே வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்து மதுரை உயர்நீதிமன்றகிளை சவுக்கு சங்கருக்கு 6 மாத காலம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.