விதிமுறைகளுடன் சேவல் சண்டை நடத்த அனுமதி! – மதுரை உயர்நீதிமன்ற கிளை!
பொங்கலை ஒட்டி தேனி உத்தமபாளைய பகுதியில் சேவல் சண்டை நடத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் தை முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் அதையொட்டி பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு முதலிய பல்வேறு விளையாட்டுகள் நடத்தப்படுவது வழக்கம். அவ்வாறாக தேனி உத்தமபாளையத்தில் நடைபெறும் சேவல் சண்டையும் புகழ்பெற்றதாக உள்ளது.
இந்நிலையில் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சேவல் சண்டை நடத்த அனுமதி அளித்துள்ளனர். அதேசமயம் சேவல் சண்டையில் காலில் ப்ளேடு, கத்தி போன்றவற்றை கட்ட கூடாது என்றும், சேவல்கள் சாவும் வகையில் போட்டி நடத்தக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.