வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 11 மே 2021 (10:36 IST)

மதுரை ஆவின் நிறுவனம்: 13.78 கோடி மோசடி - மேலாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட்!

மதுரை ஆவின் நிறுவனத்தில் 13.78 கோடி மோசடியில் ஈடுபட்டதாக பொது மேலாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 
 
மதுரை ஆவின் நிறுவனம் மேலாளர் உட்பட 5 பேர்  பால் பொருட்களை வெளிசந்தையில் விற்றது உட்பட முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. 
 
இதையடுத்து சென்னை ஆவின் துணை பதிவாளர் அலெக்ஸ் தலைமையில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மோசடி செய்தது அம்பலம் ஆகியது. பின்னர் மேலாளர் மணிகண்டன் மற்றும் உதவி பொது மேலாளர் கிருஷ்ணன் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.