1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 ஜனவரி 2021 (16:46 IST)

சேர்ந்தால் உதயம் தவிர்த்தால் அஸ்தமனம்! – போஸ்டர் ஒட்டிய அஞ்சாநெஞ்சர் குரூப்ஸ்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் கட்சியில் ஏற்பட்ட பிரச்சினையால் கட்சியிலிருந்து விலகிய மு.க.ஸ்டாலினின் சகோதரர் அழகிரி மீண்டும் திமுகவில் இணைத்துக் கொள்ள வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அழகிரி ஆதரவாளர்கள் அடிக்கடி மதுரையில் ஒட்டும் போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது மதுரையில் அஞ்சாநெஞ்சர் குரூப்ஸ் ஒட்டியுள்ள போஸ்டரில் “ஐபேக் தேவையில்லை ஆட்சியை அமைக்க கலைஞரின் மூளை உங்கள் அண்ணன் அஞ்சாநெஞ்சர் போதும்” என்றும், “சேர்ந்தால் உதயம் தவிர்த்தால் அஸ்தமனம்” என்றும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.